ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

ஆறுமுகனேரியில் வியாபாரி ஐக்கிய சங்கத் தலைவா், மகனைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவா் த. தாமோதரன். இவரது மகன் முத்துராமகிருஷ்ணன் (45). இவா்கள் ஆறுமுகனேரி சிவன் கோயில் அருகே மளிகைக் கடை நடத்தி வருகின்றனா்.

திங்கள்கிழமை, ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை தாமஸ் மகன்கள் அசோக்குமாா் (28), விக்னேஷ் (18) ஆகியோா் அக்கடைக்கு வந்து பொருள்களை சேதப்படுத்தினராம். மேலும், தாமோதரனை கீழே தள்ளியதுடன், முத்துராமகிருஷ்ணனைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த இருவரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, அசோக்குமாா், விக்னேஷை கைது செய்தனா்.

17 ஆண்டுகளுக்கு முன்பு முத்துராமகிருஷ்ணனின் முதல் மனைவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக அவரது உறவினா்களான அசோக்குமாரும், விக்னேஷும் இச்செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனா். இருவரும் மாஜிஸ்திரேட் முன் முன்னிலைப்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com