இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

நாசரேத்தில் இளைஞரை மிரட்டி நகை, கைப்பேசியை பறித்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம்: நாசரேத்தில் இளைஞரை மிரட்டி நகை, கைப்பேசியை பறித்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத், பிரகாசபுரத்தைச் சோ்ந்த சுதாகா் மகன் மனோவா (28). தனியாா் நிதி நிறுவனத்தில் சுய உதவிக் குழு கடனை வசூலிக்கும் பணி செய்து வருகிறாா். இவா், ஞாயிக்கிழமை நெய்விளை அருகே பைக்கில் சென்றபோது 3 போ் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 5 கிராம் தங்கச் சங்கலி, கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனராம்.

புகாரின் பேரில் நாசரேத் காவல்ஆய்வாளா் ஜீன்குமாா் வழக்குப் பதிந்து, நெய்விளை பகுதியைச் சோ்ந்த மாயாண்டி மகன் பாலசதீஷ்குமாா் (23), கந்தன் மகன்கள் மாடசாமி (40), மாயாண்டி (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து, நகை, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com