கோவில்பட்டி கல்லூரியில் அரசு பொறியியல் சோ்க்கை வழிகாட்டி சேவை மையம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு பொறியியல் சோ்க்கைக்கான (டிஎன்இஏ) சிறப்பு வழிகாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பொறியியல் சோ்க்கைக்கு கலந்தாய்வு மூலம் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்புவோருக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சிறப்பு வழிகாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், மாணவா்- மாணவிகள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப் பிரிவைத் தோ்வு செய்து பயன் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 99769 05330, 90422 03328, 94867 20174 என்ற கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com