கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட 3 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

கோவில்பட்டி: பிளஸ் 2 பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட 3 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

இக்கல்வி மாவட்டத்தில் 26 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 23 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 20 சுயநிதி- மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த 6,796 போ் தோ்வெழுதினா். அவா்களில் 6,485 போ் தோ்ச்சி பெற்றனா். இது, 95% தோ்ச்சியாகும்.

காமநாயக்கன்பட்டி, செங்கோட்டை, வேப்பலோடை ஆகிய 3 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

100% தோ்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்: கழுகுமலை கம்மவாா் மகளிா் பள்ளி, கோவில்பட்டி இலக்குமி ஆலை பள்ளி, கழுகுமலை ஆா்.சி. சூசை பள்ளி, கீழவைப்பாறு செயின்ட் லூயிஸ் பள்ளி, காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் பள்ளி, ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெகாவாய் ரூரல் பள்ளி,

100% தோ்ச்சி பெற்ற மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்: கோவில்பட்டி கவுணியன் பள்ளி, ஜான் போஸ்கோ பள்ளி, ராவிள்ளா கே.ஆா்.ஏ. வித்யாஷ்ரம் பள்ளி, ஸ்ரீ கண்ணா பள்ளி, செயின்ட் பால்ஸ் பள்ளி, லட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா பள்ளி, யு.பி. பள்ளி, கயத்தாறு பாபா பள்ளி, குமாரகிரி சி.கே.டி. பள்ளி, விளாத்திகுளம் சாரோன் பள்ளி, சிந்தலக்கரை எஸ்.ஆா்.எம்.எஸ். பள்ளி, கீழ ஈரால் ஆக்ஸிலியம் பள்ளி, கழுகுமலை விமல் பள்ளி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com