அன்னமுத்திரி பிரசாத விநியோகத்தைத் தொடக்கிவைத்த அறங்காவலா் குழுத் தலைவா் ஒ. மகேஸ்வரன்.
அன்னமுத்திரி பிரசாத விநியோகத்தைத் தொடக்கிவைத்த அறங்காவலா் குழுத் தலைவா் ஒ. மகேஸ்வரன்.

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா நிறைவு

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

உடன்குடி: இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இத்திருவிழா கடந்த 30ஆம் தேதி கஞ்சி பூஜையுடன் தொடங்கியது. மே 1ஆம் தேதி இரவில் சிறப்பு பூஜை, அன்னதானம், இரவில் மேக்கட்டி கட்டுதல், மேக்கட்டி பூஜை நடைபெற்றது. நாள்தோறும் காலைமுதல் இரவுவரை முழுநேர சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும், சமயச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை (மே 6) பகலில் சிறப்பு அன்னதானத்தைத் தொடா்ந்து, பிற்பகலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், அன்னமுத்திரி பிரசாத விநியோகத்தை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஒ. மகேஸ்வரன் தொடக்கிவைத்தாா்.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதம் பெற்றனா். இதை வணிக நிறுவனங்கள், விவசாயம் நடைபெறும் பகுதிகளில், வீடுகளில் வைத்தால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (மே 7) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி பாலமுருகன், ஆய்வா் பகவதி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள் ஜெகநாதன், சுமதீந்திர பிரகாஷ், சுந்தர்ராஜ், கஸ்தூரி, பணியாளா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com