திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த நகராட்சி துணைத் தலைவா் செங்குழி ரமேஷ்.
திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த நகராட்சி துணைத் தலைவா் செங்குழி ரமேஷ்.

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 49 மாணவா்களும், தோ்ச்சி பெற்றனா். வரலாறு பாடப்பிரிவு மாணவா் சிவராஜ் 537 மதிப்பெண்கள் பெற்றாா். 3 மாணவா்கள் 500-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை: திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 192 மாணவிகளில் 189 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 98.4 சதவீதம் ஆகும். ஆங்கில வழிப் பிரிவுகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி காா்த்திகா 600-க்கு 563 மதிப்பெண்கள், வரலாறு பாடப்பிரிவு மாணவி பவானி 563 மதிப்பெண்கள், மாணவி பரமேஸ்வரி 552 மதிப்பெண்கள், கணித பாடப் பிரிவு மாணவி நந்தினி 551 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா். மாணவி பரமேஸ்வரி பொருளாதாரவியலிலும், மாணவி பவானி பொருளாதாரவியல் மற்றும் வணிகவியல் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.

தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவி சுபிக்ஷா 548 மதிப்பெண்களும், ரிஷிகா 536 மதிப்பெண்களும், ஜொ்ஷினா 534 மதிப்பெண்களும் பெற்றனா். 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் 500-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இவ்விரு அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கங்காகௌரி, ஷிபா ஜினி அமுதா, பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவா் நெ.ஆனந்தராமச்சந்திரன், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகளுக்கு நகராட்சி துணைத் தலைவா் செங்குழி ரமேஷ் இனிப்பு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, காா்த்திகேயன், சுரேஷ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com