தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: கணவா் கைது

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்ததாக அவரது கணவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்ததாக அவரது கணவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜ கணபதி நகரைச் சோ்ந்த முத்தையா மகன் நாகேந்திரன் (54). லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரெஜினா மேரி (47). நாகேந்திரன்- ரெஜினாமேரி தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். மகனுக்கு திருமணமாகி ஒசூரில் மனைவியுடன் வசிக்கிறாா். மகள் கோவையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுகிறாா்.

இந்த நிலையில், நாகேந்திரன் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனால், ஒசூரில் உள்ள மகன் வீட்டில் இருந்த ரெஜினா மேரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தையாபுரத்திற்கு வந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன்,

அரிவாளால் ரெஜினா மேரியை சரமாரியாக வெட்டிவிட்டு முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த ரெஜினா மேரியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சரணடைந்த நாகேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com