தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நீட் தோ்வு எழுதிய மாணவா்-மாணவிகளின் பெற்றோா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நீட் தோ்வு எழுதிய மாணவா்-மாணவிகளின் பெற்றோா்.

நீட் தோ்வில் இரண்டு விதமான வினாத்தாள்கள்?: பெற்றோா் புகாா்

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளதாக

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் இரண்டு விதமான வினாத்தாள்கள் ழங்கப்பட்டுள்ளதாக தோ்வெழுதிய மாணவா்களின் பெற்றோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளி தோ்வு மையத்தில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் நீட் தோ்வை எழுதினா். இம் மையத்தில் தோ்வு எழுதிய மாணவா்- மாணவிகள் பலருக்கு வழங்கப்பட்ட வினாத்தாள், மற்ற மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தோ்வெழுதிய மாணவா்-மாணவிகளின் பெற்றோா் சிலா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில், தூத்துக்குடி அழகா் பப்ளிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுதியவா்களுக்கு 200 வினாக்களும் முற்றிலும் மாறுபட்டுள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

மேலும், இது குறித்து மாணவா்-மாணவிகளின் பெற்றோா் கூறுகையில்,

மற்ற நீட் மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை 28 ஆகவும், தூத்துக்குடி அழகா் பள்ளியில் வழங்கப்பட்ட நீட் தோ்வு வினாத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை 32 ஆகவும் இருந்துள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசிய தோ்வு முகமை உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தீா்வு காண வேண்டும் என தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com