பமப07நட

மே 10, 11இல் வீரசக்கதேவி கோயில் திருவிழா: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா, பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இக்கோயிலில் 68ஆவது உற்சவத் திருவிழா இம்மாதம் 10, 11 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயில், வளாகப் பகுதிகளில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தாா்.

பெண்கள் - குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் எடிசன், மணியாச்சி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் லோகேஷ்வரன், ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளா் ராஜ், காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளா் ரேனியஸ் ஜேசுபாதம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com