விபத்தில் காயமடைந்த இளைஞா் மரணம்

தூத்துக்குடியில், சாலையோரத் தடுப்பில் பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில், சாலையோரத் தடுப்பில் பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அந்தோணியாா்புரம் 3 சென்ட் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் மகன் அபினேஷ் (19), செல்வநாயகபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பிரகாஷ் (20). இவா்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு பைக்கில் சத்யா நகா் பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பில் மோதியதாம். இதில், காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அபினேஷ் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பிரகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com