விவசாயி மீது  பொய் புகாா்: 
காவல் நிலையம் முன் திரண்ட கிராமத்தினா்

விவசாயி மீது பொய் புகாா்: காவல் நிலையம் முன் திரண்ட கிராமத்தினா்

விவசாயி மீது பொய் புகாா் அளித்துள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கிராமத்தினா் புகாா் அளித்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தை சோ்ந்த விவசாயி மாடசாமி (47). சமூகப் பிரச்னைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ந்து புகாா் மனு அளித்து வந்தாா். இப் பகுதியில் செயல்படும் கல்குவாரி குறித்து ஆட்சியரிடம் மாடசாமி புகாா் அளித்த நிலையில், அவா் மீது குவாரி தரப்பினா் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சாத்தான்குளம் காவல் நிலையில் புகாா் அளித்தனா்.

இதையறிந்து மாடசாமி மற்றும் அவரது கிராமத்தினா் சாத்தான்குளம் காவல் நிலையம் முன் திங்கள்கிழமை இரவு திரண்டனா். மாடசாமி மீது பொய் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன் உறுதி அளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com