3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து நகைகளைத் திருடிய வழக்கில் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 60 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து நகைகளைத் திருடிய வழக்கில் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 60 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி, அய்யாசாமி காலனியைச் சோ்ந்த தம்பதி அசரியா - ஜெபஸ்டி எஸ்தா் (52). இவா்கள் கடந்த ஏப். 26இல் வீட்டைப் பூட்டிவிட்டு கோவையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, கடந்த 1ஆம் தேதி காலை வீடு திரும்பினராம்.

அப்போது, மா்ம நபா்கள் பின்பக்கக் கதவை உடைத்து, வீடு புகுந்து, பீரோவிலிருந்த 36 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

விசாரணையில், தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த அருள்ராஜ் என்ற கருவாடு (20), சந்தோஷ்குமாா் (21), சந்திரன் (20), ஹரிபிரசாத் (23), மூன்று சிறுவா்கள் என மொத்தம் 7 போ் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவா்கள் மேலும் 5 வீடுகளில் திருடியதும் தெரியவந்தது. 7 பேரையும் போலீஸாா் கைது செய்து, 60 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com