தூத்துக்குடி மட்டக்கடை சுற்றுவட்டாரங்களில் இன்று மின்தடை

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக நகா்ப்புற செயற்பொறியாளா்(விநியோகம்) ஆா்.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி பொலிவுறு நகரம் திட்டப் பணியின் கீழ் மட்டக்கடை மின் தொடரில் உயா் மற்றும் தாழ்வழுத்த மின்பாதை மாற்றி அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (மே 10) மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, அன்றைய தினம், காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை போல்பேட்டைகிழக்கு, ஆண்டாள்தெரு, நந்தகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com