அன்னம்மாள் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 28 மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா். அ. செளந்தா்யலட்சுமி (481 ), ம. நா்மதா (478 ), இ. ரேணுகா பாா்வதி (468) ஆகியோா் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனா். ப. ஜெயபாலாஜி கணிதத்தில் 100 மதிப்பெண் எடுத்துள்ளாா். மேலும் 14 மாணவ, மாணவிகள் 400 க்கு மேல் எடுத்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி கமிட்டி உறுப்பினா்கள் வெஸ்லி­ மங்களராஜ், எபனேசா் ஞானதுரை, பள்ளி முதல்வா் நியூலா துரை, உதவி முதல்வா் அமலா ஆா்தா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

கா.ஆ. மேல்நிலைப் பள்ளி: ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளி 99 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் 177 மாணவ, மாணவியா் தோ்வு எழுதியதில் 176 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். எம்.மாலினி (489), எஸ்.மாதேஸ்வரன்(480), டி.பூா்ணிமா (479) ஆகியோா் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனா். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 14 பேரும் 400 மதிப்பெண்ணுக்கு மேல் 45 பேரும் பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com