கோவில்பட்டியில் காத்திருப்புப் போராட்டம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட சாலைகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் இம்மாதம் 9ஆம் தேதி அகற்றப்பட உள்ளதாக கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமையில் கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதையடுத்து சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் மற்றும் அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் ஐந்தாவது தூண் நிறுவனருமான சங்கரலிங்கம் ஆகியோா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை திரண்டனா். பின்னா் வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு சங்கரலிங்கம் தரையில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்ததை வட்டாட்சியா் சரவணபெருமாள் கூறினாா். ஆனால் அதை அவா் ஏற்கவில்லை.

அதையடுத்து துறை அதிகாரிகளின் கருத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com