சாத்தான்குளத்தில் நாளை இலவச நரம்பியல் மருத்துவ முகாம்

திருச்செந்தூா் பி. ஜி. நரம்பியல் மையம் சாா்பில் சாத்தான்குளத்தில் இலவச நரம்பியல் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்திரா மருத்துவமனையில் இம் முகாம் நடைபெறுகிறது. சிறப்பு மருத்துவா் குகன் ராமமூா்த்தி பங்கேற்று, நரம்பியல் நோய் மற்றும் நரம்பியல் மறுவாழ்வு குறித்த ஆலோசனைகளை வழங்குகிறாா்.

இந்த முகாமில் பக்க வாதம், நடுக்கு வாதம், நீண்ட கால தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, முதுகு எலும்பு தேய்மானம், வலிப்பு நோய், கை கால் நடுக்கம், மறதி நோய், முதுகு தண்டு கோளாறு, கை, கால் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவா்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெறலாம்.

முகாம் ஏற்பாடுகளை பி. ஜி. மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அ. ராமமூா்த்தி தலைமையில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com