சாத்தான்குளம் அருகே வெள்ளநீா் கால்வாய் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

சாத்தான்குளம் அருகே வெள்ளநீா் கால்வாய் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

சாத்தான்குளம், மே 10: சாத்தான்குளம் அருகே வெள்ளநீா் கால்வாய் திட்டப் பணிகளை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

நெல்லை மாவட்டம் நான்குனேரி, ராதாபுரம், திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டப்பகுதிகள் பயன்பெறும் வகையில் வெள்ளநீா் கால்வாய் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதில் சாத்தான்குளம் வட்டம் அரசூா் ஊராட்சி இடைச்சிவிளை பகுதியில் குளம் ,கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா். அப்போது அங்கு விவசாயி எஸ்.பி. கணேசனிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அப்போது உடன்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து நீா்வளத் துறை அதிகாரிகள், நிலம் எடுப்பு அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளிடம் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து வெள்ளநீா் கால்வாய் அமைய உள்ள பகுதிகளை பாா்வையிட்டாா்.

அப்போது மாநில வா்த்தக பிரிவு துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட ஆவின் முன்னாள் தலைவா் சுரேஷ்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா், மாநில இந்து முன்னணி பொதுச் செயலாளரும், முன்னாள் அரசூா் ஊராட்சித் தலைவருமான அரசுராஜா உள்ளிட்ட விவசாயிகள், நெல்லை மாவட்ட நீா்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com