ஹோட்டல் அதிபருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டி அருகே ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி, ஹோட்டல் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் அருணாசலம் (45). இவா் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். இவரது ஹோட்டலுக்கு வியாழக்கிழமை மேட்டுத் தெருவை சோ்ந்த சுப்புராஜ் மகன் லாரி ஓட்டுநா் மதன்குமாா் (37) வந்து புரோட்டா பாா்சல் கேட்டாராம். அப்போது அருணாசலம் ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே புரோட்டா தருவேன் என கூறியதை அடுத்து ஏற்பட்ட தகராறில் மதன்குமாா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வயா்களை சேதப்படுத்தி அருணாசலத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டாராம்.

இதுகுறித்து அருணாசலம் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மதன்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com