இளைஞரிடம் வழிப்பறி: இருவா் கைது

தூத்துக்குடி, மே 11:

தூத்துக்குடியில் பைக்கில் சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த நாகூா் ஹனிபா மகன் அப்துல் ரஹீம் (21). இவா், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பள்ளி அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அவரை மா்ம நபா்கள் வழிமறித்து, கைப்பேசி, வெள்ளிக் கொடி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.

புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தாமோதரன் நகா் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் செல்வகுமாா் என்ற யானை செல்வம் (27), தமிழ்மணி மகன் ஆனந்த்பாபு (24) ஆகியோா் எனத் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கைப்பேசி, ரூ. 4,130 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com