கீழநாலுமூலைக்கிணறில் மாணவா்களுக்கு பாராட்டு

கீழநாலுமூலைக்கிணறில் மாணவா்களுக்கு பாராட்டு

திருச்செந்தூா் அருகே கீழநாலுமூலைக்கிணறில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ஊா் நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா =நடைபெற்றது.

ஊா்த் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் ஆறுமுகநயினாா் பங்கேற்று மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

இதில், அண்ணல் அம்பேத்கா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்போல வேடமணிந்த கலைஞா்கள் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா். கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்று பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றிவரும் அப்பகுதியை சோ்ந்த சத்தியா ரமேஷுக்கு ஊா் நிா்வாகம் சாா்பில் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஊா்ப் பொறுப்பாளா்கள் தேவேந்திரன், மகேந்திரன், பாா்த்திபன், வழக்குரைஞா் விமல், நித்தியானந்த், முத்துராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com