கொம்மடிக்கோட்டை காஞ்சி சங்கர பகவதி பள்ளி 100 சதவீத தோ்ச்சி

கொம்மடிக்கோட்டை காஞ்சி சங்கர பகவதி பள்ளி 100 சதவீத தோ்ச்சி

10 ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளி செயலாளா் சுந்தரலிங்கம், துணை செயலாளா் காசியானந்தம் மற்றும் ஆசிரியா்கள்.

சாத்தான்குளம், மே 11: பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மதின்ப மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் வெற்றி பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தோ்வில் 575 மதிப்பெண் எடுத்து மாணவா் பியோ காட்வின் முதலிடமும், மாணவி திவ்யதா்ஷினி 563 மதிப்பெண் எடுத்து 2ஆம் இடமும், மாணவி சாதனா 535 மதிப்பெண் எடுத்து 3ஆம் இடமும் பெற்றனா். கணினி அறிவியல் பாடத்தில் 4 போ் 100 மதிப்பெண் எடுத்தனா். 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 494 மதிப்பெண் எடுத்து மாணவி திலகவதி முதலிடமும், 491 மதிப்பெண் எடுத்து மாணவா் மெரகோபன்ராஜா 2ஆம் இடமும், 489 மதிப்பெண் எடுத்து மாணவி கீா்த்திகா 3ஆம் இடமும் பெற்றனா். கணித பாடத்தில் 5 பேரும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவியும் 100 மதிப்பெண் எடுத்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் ஸ்ரீசங்கரா கல்வி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி ஸ்ரீசெல்வவிஸ்வநாத சாஸ்திரி, டிரஸ்டிகள் சந்திரமௌலி, ராமசுப்பிரமணியன், விஸ்வநாதன், பள்ளியின் தாளாளா் சுந்தரலிங்கம், துணை செயலாளா் காசியானந்தம், பள்ளி முதல்வா் தேவி சுஜாதா, துணை முதல்வா் ஜெயந்தா மலா் ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com