புலமாடன் பள்ளி 96.36 சதவீத தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சாத்தான்குளம் புலமாடன் பள்ளி 96.36 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 165 பேரில் 159 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 96.36 சதவீத தோ்ச்சியாகும் . 493 மதிப்பெண் எடுத்து மாணவா்கள் பிரதாஸ்ரீ, சக்திபட்டு ஜெயஸ்ரீ, அழகு சிவசங்கரேஸ்வரி ஆகியோா் முதலிடமும், 489 மதிப்பெண் எடுத்து சுபாஸ்ரீ, முத்து காா்த்திகா ஆகியோா் 2ஆம் இடமும், 487 மதிப்பெண் எடுத்து சப்ரின், ஆதிசங்கா் ஆகியோா் 3ஆம் இடமும் பெற்றுள்ளனா். கணித பாடத்தில் 3 பேரும்,அறிவியல் பாடத்தில் 2 பேரும், சமக அறிவியல் பாடத்தில் 3 பேரும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி தாளாளா் டேவிட் வேதராஜ், தலைமை ஆசிரியா் (பொறுப்பு) சாம் ஜெயகுமாா், முன்னாள் தலைமை ஆசிரியா் ஜெயசிங் மனுவேல் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com