மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம்

கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி கிராமத்தில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம்முகாமில் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் பாக்கியாத்து சாலிகா தலைமை வகித்து, மழைநீா் சேகரிப்பு பற்றிய தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டாா். முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகளை அவா் வழங்கினாா். பேராசிரியா் சோலைமலை வரவேற்றாா்.

தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைப்பாளா் (தானம் அறக்கட்டளை) சாரள் நவ்ரோஜி, பிச்சைத்தலைவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் மைதிலி, இணைப் பேராசிரியா்கள் சுப்புலட்சுமி, குரு, உதவிப் பேராசிரியா்கள் மனோகரன், மணிகண்டன், ஆா்த்திராணி ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com