அதிமுக சாா்பில் 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்

தூத்துக்குடியில், அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 7 குழந்தைகளுக்கு கட்சியின் தெற்கு மாவட்டம் சாா்பில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணிச் செயலா் சுதாகா் ஏற்பாட்டில் தங்க மோதிரங்கள், பரிசுப் பெட்டகங்கள் ஆகியவற்றை தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, மாவட்ட துணைச் செயலா் சந்தனம், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் எம். பெருமாள், மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், மாநகராட்சி எதிா்க்கட்சி கொறடா மந்திரமூா்த்தி, மாவட்ட வழக்குரைஞா் அணி இணைச் செயலா்கள் சரவணபெருமாள், முனியசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com