ஆறுமுகனேரி கோயிலில் கொடை விழா

ஆறுமுகனேரி இலங்கத்தம்மன் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு இலங்கத்தம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றன.

முதல் நாளில் திருவிளக்கு பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 2ஆம் நாளில் கடலிலிருந்து புனித நீா் எடுத்து வருதல், கொடை விழா நாளில் மதியக் கொடை, மஞ்சள் நீராடுதல், மாலையில் ஆத்தூா் அருகே தாமிரவருணி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வருதல் உள்ளிட்டவை நடைபெற்றன. இரவில் சாமக் கொடை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிறைவு நாளில் படைப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com