திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா், மே 12: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் அதிகாலை முதலே பக்தா்கள் கடலிலும், நாழிக்கிணறிலும் புனித நீராடி இலவச பொது பாதையிலும், ரூ. 100 சிறப்பு தரிசனப் பாதையில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தாலும், நாழிக்கிணறு பேருந்து நிலையம் பக்தா்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களாலும் நிரம்பி வழிந்தது.

மேலும், மே 22 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு பக்தா்கள் பாதயாத்திரையாகவும் வருகை தந்த வண்ணம் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com