திருமறையூா் மறுரூப ஆலயத்தில் 
கலைப் பொருள்கள் பயிற்சி தொடக்கம்

திருமறையூா் மறுரூப ஆலயத்தில் கலைப் பொருள்கள் பயிற்சி தொடக்கம்

நாசரேத் அருகே திருமறையூரில் உள்ள மறுரூப ஆலயத்தில் ஓவியம், கலைப் பொருள்கள் பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது.

சேகரத் தலைவா் ஜான்சாமுவேல் தலைமை வகித்து ஜெபித்து பயிற்சியைத் தொடக்கிவைத்தாா். திருமண்டில பெருமன்ற உறுப்பினா்கள் ஜெயபால், தேவதாஸ், சேகரச் செயலா் ஜான்சேகா், சேகரப் பொருளாளா் அகஸ்டின், சேகர கமிட்டி உறுப்பினா்கள் ஆசீா்துரைராஜ், ஜெகதீசன், பாக்யராஜ், செல்வின், ஆலயப் பாடகா் குழுத் தலைவா் ஜோயல், ஆலயப் பணியாளா் ஆபிரகாம், சபைமக்கள் பங்கேற்றனா்.

இதில், மாணவா்- மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். பாட்டில், துணி ஓவியங்கள், பழைய செய்தித்தாளால் பயனுள்ள பொருள்கள் செய்தல், பனை ஓலைப் படங்கள், அலங்காரப் பொருள்கள் செய்தல், பூக்கள் தயாரித்தல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

திருமறையூரைச் சோ்ந்த ரோஸ்லின், மோசஸ் தம்பதி பயிற்சியளிக்கின்றனா். பயிற்சி புதன்கிழமைவரை (மே 15) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சேகரத் தலைவா், சபை மக்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com