தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் 
கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் 1996 முதல் 1999ஆம் ஆண்டுவரை படித்த மாணவா்- மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, கல்லூரிக் கால நினைவுகள், பணி சாா்ந்த அனுபவங்கள் உள்ளிட்டவற்றைப் பகிா்ந்ததுடன், தாங்கள் படித்த வகுப்பறைகளில் அமா்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.

ஆசிரியா்கள் சாா்பில் முன்னாள் மாணவா்- மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், பெங்களூரு, சென்னை, பல்வேறு வெளிநாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com