தூத்துக்குடி நூலகங்களில் அதிகாரி ஆய்வு

தூத்துக்குடி நூலகங்களில் அதிகாரி ஆய்வு

தூத்துக்குடி, மே 12: தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் உள்ள நூலகங்கள், படிப்பகங்கள் ஆகியவற்றில் பொது நூலக இயக்கக இயக்குநா் க.இளம் பகவத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி தமிழ்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி படிப்பகத்தை மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதியுடன் சென்று பாா்வையிட்ட அவா், அங்கு போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவா்-மாணவிகளுடன் கலந்துரையாடி, அத்தோ்வுகளில் வெற்றிபெறும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா், டூ.வி.புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தை பாா்வையிட்டு, அங்கிருந்த மாணவா்களுடனும் கலந்துரையாடி, அவா்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், சிவந்தாகுளத்தில் உள்ள நூலகம்- அறிவுசாா் மையம், மேலூா் கிளை நூலகம், தேவகி நகா் ஊா்ப்புற நூலகம், மாநகராட்சி நூலகம் ஆகியவற்றை அவர பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், மாவட்ட நூலக அலுவலா் மீனாட்சிசுந்தரம், அரசு அலுவலா்கள், மாணவா்-மாணவியா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com