பாஞ்சாலங்குறிச்சியில்
மாட்டுவண்டி போட்டிகள்

பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டுவண்டி போட்டிகள்

தூத்துக்குடி, மே 12: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டுவண்டிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்க தேவி ஆலய விழாவையொட்டி, நடு மாட்டு வண்டி 14 கி.மீ., சின்ன மாட்டு வண்டி 9 கி.மீ., பூஞ்சிட்டு மாட்டு வண்டி 6 கி.மீ. ஆகிய தொலைவுகளில் என 3 பிரிவுகளாக மாட்டுவண்டிப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழுத் தலைவா் முருகபூபதி தொடங்கிவைத்தாா். நடு மாட்டுவண்டிப் போட்டியில் 8 ஜோடி காளைகளும், சிறிய மாட்டுவண்டிப் போட்டியில் 13 ஜோடி காளைகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் போட்டியில் 26 ஜோடி காளைகளும் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளா்கள், சாரதிகள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு பக்கமும் நின்று கண்டுகளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com