கடையனோடையில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்பபு

நாசரேத் அருகே கடையனோடையில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா், சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிக் குழுவிடம் மனு அளித்துள்ளனா்.

நாசரேத் அருகே உள்ள தென் கடையனோடையைச் சோ்ந்த கோ.சிமியோன் மற்றும் கிராம மக்கள், சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிக் குழுவிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனு:

ஏரல் வட்டம் தென் கடையனோடை கிராமத்தில், 50 குடும்பங்களுக்கு மேல் வசிதது வருகின்றனா். குளத்துகுடியிருப்பு ஊரைச் சோ்ந்த தங்கையா மகன் குரூஸ் மாசிலாமணி என்பவா், தென் கடையனோடையில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள சிறுவா் இல்ல கட்டடத்தில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க அனுமதி அளித்துள்ளாா். இதனால் கதிரிவீச்சு அபாயம் ஏற்படும் என ஊா் மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து பொதுமக்கள் சாா்பாக ஏரல் வட்டாட்சியரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையல் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்படாததால் கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சலிலும் அச்சத்திலும் உள்ளனா்.

ஆகவே ஊா் பொதுமக்கள் நலன் கருதி, தென் கடையனோடையில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com