தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் செவிலியா் கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள், ஊழியா்களுடன் மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் மற்றும் உறைவிட மருத்துவ அதிகாரி சுதா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் செவிலியா் கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள், ஊழியா்களுடன் மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் மற்றும் உறைவிட மருத்துவ அதிகாரி சுதா

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் காயகல்ப் விருது

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மத்திய அரசின் காயகல்ப் விருதுக்கு தோ்வு பெற்றுள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுத்தம், சுகாதாரம் மற்றும் நோய் தொற்று கிருமிகள் பரவுதல் தடுக்கும் வழிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என்பதை காயகல்ப் திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்து சிறந்த முறையில் பின்பற்றும் மருத்துவமனைக்கு விருதுகள் வழங்கி வருகின்றன.

அதனடிப்படையில் இம்மருத்துவமனையில் கடந்த ஜன. 22,23 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் பத்மநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் ரியாஸ், செவிலியா் ஓமனா ஆகிய இருவரும் ஆய்வுகள் மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் 35 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் கலந்து கொண்ட மதிப்பீட்டு போட்டியில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 92.5 7 சதவீதம் மதிப்பெண்களும், தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை 91.71 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றது.

மதிப்பீட்டில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மற்றும் காயகல்ப் விருது வழங்கப்படுகிறது. அதன்படி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு விருதுடன் ரூ.25 லட்சம் கிடைக்கும்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் கூறுகையில் மருத்துவமனையின் அனைத்து துறை ஊழியா்கள், ஒப்பந்த ஊழியா்கள் ஆகியோா் ஒத்துழைப்பில் விருது கிடைத்துள்ளது. அனைவருக்கும் பாராட்டு. இந்த நிதியை பயன்படுத்தி மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com