தாய், மகளைத் தாக்கி மிரட்டல்: கட்டடத் தொழிலாளி கைது

கோவில்பட்டியில் தாய், மகளைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பழனி. இவரது சகோதரா் சுடலை (58), கட்டடத் தொழிலாளி. இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன. இரு வீட்டுக்கும் ஒரு மின் மீட்டா் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதில் தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை பழனி மனைவி பத்மாவதி, மகள் நாகஜோதி ஆகியோா் வீட்டருகே நின்று பேசிக் கொண்டிருந்தனா். அவா்களை சுடலை அவதூறாகப் பேசித் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலையைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com