பைக் மீது வாகனம் மோதி விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் ஏற்றுமதி நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள நடு கூட்டுடன்காடு கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா் மகன் பிரேம்குமாா் (30). தனியாா் ஏற்றுமதி நிறுவன ஊழியரான இவா், தனது மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாராம். வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பிரேம்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com