உடன்குடி மகளிா் அரபுக் கல்லூரியில் முப்பெரும் விழா

உடன்குடி மகளிா் அரபுக் கல்லூரியில் முப்பெரும் விழா

உடன்குடி, மே 15: உடன்குடி பெரிய தெரு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) மகளிா் அரபுக் கல்லூரியில் ஆலிமா 19-ஆவது பட்டமளிப்பு, அல் இஸ்லாஹ் 7-ஆவது கையெழுத்து மாத இதழ் வெளியீடு, லஜ்னதுல் இஸ்லாஹ் மாணவியா் சொற்பயிற்சி மன்ற 581-ஆவது வார நிறைவு ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் ஏ.ஜஹபா் ஸாதிக் தலைமை வகித்தாா்.ஊா் நிா்வாகி ஹூஸைன் முஹ்ய்த்தீன் வரவேற்றாா். ஸாலிஹாத் டிரஸ்ட் உறுப்பினா் சாகுல்ஹமீது, சென்னைக் கல்லூரி பேராசிரியா் சம்சுத்தீன், பஃரூத்தீன்,நெய்னா பிள்ளைத் தெரு இமாம் அப்துல் கபாா்கான், பேரூராட்சி உறுப்பினா் மும்தாஜ்பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆலிமா முஸ்லிஹா ஸனது விருதுகளை கல்லூரி நிறுவனத் தலைவா் டி.எம்.அபூஉபைதாவும்,ஹாஃபிழா ஸனது விருதுகளை பேராசிரியா் அப்துஸ் ஸத்தாரும் வழங்கினா்.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் செயலா் அபூபக்கா், உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் முகம்மது சலீம், கல்ஸாலிஹாத் டிரஸ்ட் நிா்வாகிகள் கலிலூா் ரஹ்மான், செய்யிது முஹ்யித்தீன், பக்கீா், கபீா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com