‘ஏரல் காந்தி சிலை சந்திப்பு மதுக்கடையை இடமாற்ற வேண்டும்’

ஏரல் காந்தி சிலை சந்திப்பில் இயங்கிவரும் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மாவட் ட நிா்வாகத்திற்கு, தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

ஏரல் காந்தி சிலை சந்திப்பு அருகே அரசு மதுக்கடைசெயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிப்பவா்கள் அப்பகுதியில் நிதானம் இழந்து அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனா்.

மேலும், மதுக்குடித்துவிட்டு, மதுவிலக்கு கொள்கையை உயிா் மூச்சாக கொண்ட மகாத்மா காந்தியின் சிலை அருகிலேயே போதையில் சுயநினைவின்றி அவ்வப்போது சிலா் வீழ்ந்துகிடக்கின்றனா். இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சமடைகின்றனா்.

இந்த மதுக்கடையை அகற்றுமாறு ஏற்கெனவே பாஜக சாா்பில் தீா்மானம் நிறைவேற்றி ஆட்சியா் அலுவலகதில் மனுஅளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நி ா்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடை இடம் மாற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com