சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் மூடப்படாத குழியால் வாகன ஓட்டிகள் திணறல்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் மூடப்படாத குழியால் வாகன ஓட்டிகள் திணறல்

சாத்தான்குளம், மே 14: சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட குழி முழுமையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் காமராஜா் சிலை முன் உள்ள பிரதான சாலை பகுதியில் குடிநீா் குழாய் சீரமைக்க குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. அந்தப் பணி நிறைவுற்ற நிலையில் அதே பகுதியில் தனியாா் கேபிள் துண்டிக்கப்பட்டதாகக் கூறி குழி தோண்டப்பட்டு கேபில் சீரமைக்கப்பட்டது. பின்னா், குழியை முழுமையாக மூடாமல் வயா்கள், மரக்கட்டைகள், பல் மருத்துவமனை அடையாள அட்டையை வைத்துவிட்டு அதன் பணியாளா்கள் சென்றுள்ளனா்.

இந்த சாலை வழியாக திசையன்விளை, நாகா்கோவில், கன்னியாகுமாா், திருவனந்தபுரம் , வள்ளியூா், முதலூா், தட்டாா்மடம் பகுதிக்கு அரசுப் பேருந்துகளும் இதர வாகனங்களும் அதிகளவில் சென்று திரும்பும். இந்த நிலையில், முறையாக மூடப்படாத குழியால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. ஆதலால், அதிகாரிகள் பாா்வையிட்டு பாதியில் நிற்கும் குழியை முழுமையாக மூடி விபத்து நிகழாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com