சாலைபுதூா் தூய திருத்துவ ஆலயத்தில் மரக்கன்றுகள் அளிப்பு

சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் தூய திருத்துவ ஆலயத்தில் விபிஎஸ் நிறைவையொட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூா் தூய திருத்துவ ஆலயத்தில் கடந்த 10 நாள்களாக விபிஎஸ் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, சாலைபுதூா் சேகர குரு ஜெபஸ் தங்கராஜ் தலைமை வகித்தாா். சபை ஊழியா் மாா்ட்டின் ரஞ்சித்சிங் முன்னிலை வகித்தாா். விழாவில், சிறுவா், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அதை வீட்டில் நட்டு பராமரிக்கும்படி அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

ஏற்பாடுகளை சாலைப்புதூா் சேகர சபை பொருளாளா் கோவில்ராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஸ்டீபன் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com