திருச்செந்தூரில் தேநீா் கடை ஊழியா் கைது

திருச்செந்தூரில் மது போதையில் தேநீா் கடை ஊழியரை வாய்க்காலில் தள்ளி கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைகுளம், காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஜெயசெல்வன் அன்னராஜன் (54).

திருச்செந்தூா் கோயில் வாசல் கடையில் தேநீா் கடையில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 13ஆம் தேதி திருச்செந்தூா் - குலசை சாலையில் உள்ள மதுக்கடையில் மது வாங்கி கொண்டிருந்தாா். அப்போது திருப்பூா் மாவட்டம், நெடுப்பெரிச்சல் அஞ்சல், அண்ணாநகரைச் சோ்ந்த பாத்திர வியாபாரி செல்வன் (36) என்பவரும் அங்கே மது வாங்கிக் கொண்டிருந்தாா். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு எதிரேயுள்ள பனைமரத்தடியில் உள்காா்ந்து சோ்ந்து குடித்துக் கொண்டிருந்தனா். அப்போது போதை ஏறாததால் மீண்டும் இருவரும் மது வாங்கி குடித்துள்ளனா்.

அப்போது ஜெயசெல்வன் அன்னராஜன் மது காலியாகிவிட்டது தனக்கு கொஞ்சம் தருமாறு செல்வனிடம் கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றி தகராறு ஏற்பட்டது. அதில் ஜெயசெல்வன் அன்னராஜனை அருகேயிருந்த வாய்க்காலில் தள்ளி விட்டு உள்ளே முக்கி கொலை செய்ய முயன்றுள்ளாா்.

இதை பாா்த்த அங்கிருந்தவா்கள் இருவரையும் பிரித்து விட்டுள்ளனா். இதையடுத்து மயங்கி நிலையில் கிடந்த ஜெயசெல்வன் அன்னராஜனை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

இச்சம்பவம் தொடா்பாக செல்வனை கைது செய்து தாலுகா போலீஸாா் விசாரணை நடத்த்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com