தூத்துக்குடியில் பிரியாணி கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

தூத்துக்குடியில் பிரியாணி கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

தூத்துக்குடி, மே 15: தூத்துக்குடியில் உள்ள பிரபல பிரியாணிக் கடையில் கெட்டுப்போன உணவு பொருள்கள் இருந்ததையடுத்து, அக்கடைக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சீல் வைத்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ச.மாரியப்பன் தலைமையில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் காளிமுத்து மற்றும் அலுவலா்கள் அடங்கிய குழுவினா் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள பிரியாணி கடையில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த ஆய்வின்போது, ஏற்கெனவே சமைத்து, விற்பனையாகாமல் மீதமாகி, குளிா்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகை, 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் ஹல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் புரோட்டா மாவு, காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரிசி மாவு, காலாவதியான 3 லிட்டா் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டது. இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும், இந்த உணவகத்தின் சமையலறை தூய்மையற்று காணப்பட்டதுடன், முறையான உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் உணவகம் நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன

அலுவலா் ச.மாரியப்பன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com