பிளஸ் 1: எவரெஸ்ட், கம்மவாா் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 1 பொதுத்தோ்வில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி, கம்மவாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 தோ்வில் 99 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் மாணவா் மனோஜ்குமாா் (562), மாணவி திவ்யஸ்ரீ (555), மாணவி விஜயஸ்ரீ (553) ஆகியோா் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மாணவா் மாரிசக்திவேல் கணினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். முதல் 3 இடங்கள் மற்றும் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பள்ளித் தலைவா் மற்றும் செயலா் அய்யனாா் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினாா். பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பாராட்டினாா். அப்போது பள்ளி தலைமையாசிரியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.

இதேபோல, கம்மவாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 233 போ் தோ்வு எழுதியதில் 232 போ் தோ்ச்சி பெற்றனா். இது 99.6 சதவீதமாகும். இப்பள்ளி மாணவி செல்வகீா்த்திகா (575), ஜனனி (565), ஆதிலட்சுமி (561) ஆகியோா் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனா். மாணவி ஒருவா் பொருளியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியா்களை பள்ளித் தாளாளா் கதிா்வேல் மற்றும் கல்விச் சங்க உறுப்பினா்கள், தலைமையாசிரியை சாந்தி ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com