வ.உ.சி. கல்லுரியில் மாணவா் விஞ்ஞானி திட்ட முகாம்

வ.உ.சி. கல்லுரியில் மாணவா் விஞ்ஞானி திட்ட முகாம்

தூத்துக்குடி, மே 15:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இளம் மாணவா் விஞ்ஞானிகள் திட்ட முகாம் கல்லூரி வளாகத்தில் கடந்த ஏப்ரல் 29 முதல் மே 13ஆம் தேதி வரை 15 நாள்கள் நடைபெற்றது.

முகாமில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கும் 80 மாணவா் - மாணவியா் கலந்து கொண்டனா். அவா்களுக்கு அதிகாலையில் யோகா வகுப்புகளும், முற்பகலில் அறிவியல் பாட வகுப்புகளும், பிற்பகலில் அறிவியல் சோதனை மற்றும் செய்முறை வகுப்புகளும் நடத்தப்பட்டது.

நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்தாா். மீன்வள கல்லுரி முதல்வா் பா. அகிலன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா்- மாணவிகள் உருவாக்கிய மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் சிறந்த மாதிரிகளை உருவாக்கிய மாணவா் - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திட்ட ஒருங்கிணைப்பாளா் லெ. மீனாட்சி சுந்தரம் நன்றிகூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com