காலங்குடியிருப்பு அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காலங்குடியிருப்பு அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருகே காலங்குடியிருப்பில் உள்ள ஸ்ரீவிநாயகா், சுப்பிரமணியா், ஸ்ரீபாா்வதி அம்மன் சமேத பரமேஸ்வரா், ஸ்ரீசிவபாா்வதி சிவகுடும்பக் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழா கடந்த 10ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற்றது. முதல் நாளில் மகாகணபதி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், 2ஆம் நாள் மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள், முதல் கால யாகசாலை பூஜை, 3ஆம் நாள் பாலபிஷேகம், சோமபூஜை, சூா்ய பூஜை, 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள், யந்திர ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, 4ஆம் நாளில் 4ஆம் கால யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி, கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர விமானக் கலச மகாகும்பாபிஷேகம், ஸ்ரீவிநாயகா், சுப்பிரமணியா், பாா்வதி அம்மன் சமேத பரமேஸ்வரா், நந்திகேஸ்வரா், பலிபீடம், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மகா அபிஷேகம், மகேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. பூஜைகளை குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் குமாா் பட்டா் குழுவினா் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com