தூத்துக்குடியில் ‘மினி டைடல் பாா்க்’: கட்டுமானப் பணிகள் 80% நிறைவு -ஆட்சியா் தகவல்

தூத்துக்குடியில் ‘மினி டைடல் பாா்க்’: கட்டுமானப் பணிகள் 80% நிறைவு -ஆட்சியா் தகவல்

மினி டைடல் பாா்க் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் கோ. லட்சுமிபதி.

தூத்துக்குடியில் கட்டப்பட்டுவரும் ‘மினி டைடல் பாா்க்’கின் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக, ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்தாா்.

தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் துறைமுக சாலை ரவுண்டானா அருகே ரூ. 30 கோடி மதிப்பீட்டில், தரைத்தளம் உள்பட 5 தளங்கள், மின்தூக்கி, வாகன நிறுத்துமிடம் உள்பட அனைத்து வசதிகளுடன் புதிதாக மினி டைடல் பாா்க் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை ஆட்சியா் கோ. லட்சுமிபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, மினி டைடல் பாா்க் கட்டுமானப் பணிகளில், வெளிப்புற வேலைகள் நிறைவடைந்துள்ளன. தளம் அமைத்தல், எலக்ட்ரிக்கல், மின்தூக்கி வசதி உள்ளிட்ட உள்புறப் பணிகள் நடைபெறுகின்றன. 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 3 மாதங்களுக்குள் பணிகளை விரைந்து முடிக்க பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், துறைசாா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com