தூய்மைப்பணி சுமை ஆட்டோ
மோதியதில் இருவா் காயம்

தூய்மைப்பணி சுமை ஆட்டோ மோதியதில் இருவா் காயம்

திருச்செந்தூரில் நகராட்சிக்குச் சொந்தமான தூய்மைப்பணி ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

திருச்செந்தூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் தூய்மைப் பணியாளா்களால் சேகரிக்கப்படும் குப்பைகள், டிப்பா் லாரிகள், சுமை ஆட்டோ, பேட்டரி வாகனங்களில் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், திருச்செந்தூா் சிவன் கோயில் தெற்குபுறத்தில் புதன்கிழமை குப்பைகளை ஏற்றுவதற்காக வந்த சுமை ஆட்டோவை, அதன் ஓட்டுநா் அங்குள்ள விநாயகா் கோயில் அருகே நிறுத்திவிட்டு அருகே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பெண் ஊழியா், ஆட்டோவை இயக்கியபோது அது கட்டுப்பாட்டை இழந்து

அப் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது அமா்ந்திருந்த இருவா் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com