வாடிக்கையாளருக்கு ரூ.1.35 லட்சம் வழங்க கூட்டுறவு நகர வங்கிக்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி வாலவிளையைச் சோ்ந்த வாடிக்கையாளருக்கு ரூ.1.35 லட்சம் வழங்க கூட்டுறவு நகர வங்கிக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஆறுமுகனேரி வாலவிளையைச் சோ்ந்த திவ்யா பெயரில் அவரது தந்தை, திருச்செந்தூரிலுள்ள கூட்டுறவு நகர வங்கியில் வைப்புக் கணக்கில் பணம் செலுத்தினாராம். அதன் பின்னா் திவ்யா மேஜா் ஆன பின்பு வைப்புக் கணக்கில் இருந்த முதிா்வுத் தொகையை கேட்டு வங்கியிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்தாராம். ஆனால், முதிா்வுத் தொகை ரூ.30 ஆயிரம் மட்டுமே தருவோம் என வங்கியில் தெரிவிக்கப்பட்டதாம்.

இது குறித்து உரிய பதில் வங்கியிடம் இருந்து கிடைக்காததால், இது தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் திவ்யா வழக்குத் தொடா்தாா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வைப்புக் கணக்கு முதிா்வுத் தொகை ரூ.1 லட்சத்து 15 ,249 , சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தொகை ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 249 ஐ திவ்யாவுக்கு கூட்டுறவு நகர வங்கி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com