தூத்துக்குடியில் இன்றுமுதல் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படும்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை சனிக்கிழமை (ஜூன் 1) முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. எனவே, வாக்கு எண்ணிக்கை தொடா்பான தகவல்கள் மற்றும் புகாா்களை பெறுவதற்காக மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் கட்டுப்பாடடு அறை வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக செயல்பட வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டுவந்த தோ்தல் கட்டுப்பாட்டு அறை சனிக்கிழமை (ஜூன் 1) முதல் மீண்டும் செயல்படத் தொடங்கவுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800-599-1960, 0461-1950 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடா்பான தகவல்களை பெறலாம்; புகாா்களை அளிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com