தூத்துக்குடி
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் விஷம் குடித்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் விஷம் குடித்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி அன்னம்மாள் (62). தனியாக வசித்து வந்த இவா், உடல்நலக் குறைவு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாராம்.
இந்நிலையில் அவா் சனிக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கியதாக கூறப்படுகிறது.
அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].