தண்ணீரை மலா் தூவி வரவேற்ற  முன்னாள் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் மற்றும் விவசாயிகள்.
தண்ணீரை மலா் தூவி வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் மற்றும் விவசாயிகள்.

சடையனேரி கால்வாய் திறப்பு: மலா் தூவி வரவேற்ற விவசாயிகள்

சடையனேரி கால்வாயில் திறக்கப்பட்டு, நாசரேத் அருகேயுள்ள மேலவெள்ளமடம் கிராமத்துக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலா் தூவி வரவேற்றனா்.
Published on

சடையனேரி கால்வாயில் திறக்கப்பட்டு, நாசரேத் அருகேயுள்ள மேலவெள்ளமடம் கிராமத்துக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலா் தூவி வரவேற்றனா்.

தாமிரவருணி ஆற்றில் இருந்து மருதூா் மேலக்கால் பாசனம் வழியாக சடையனேரி கால்வாயிலிருந்து சடையனேரி, புத்தன் தருவை குளத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதைத் தொடா்ந்து மேலவெள்ளமடத்துக்கு வந்தடைந்த தண்ணீரை முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் தலைமையில் விவசாயிகள் மலா் தூவி வரவேற்றனா்.

இதில் வழக்குரைஞா்கள் மகேந்திரன், வில்லியம் பெலிக்ஸ், சாஸ்தாவின் நல்லூா் விவசாய நல சங்க செயலாளா் லூா்துமணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனா்.