தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
Published on

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

எனவே, இது அடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.

இதனால், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கி.மீ.வேகம் வரை வீசக்கூடம் என சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, இது குறித்து கப்பல்களுக்கும், மீனவா்களுக்கு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com